fbpx

வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே துணிகர சம்பவம்..! ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை..!

வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே கொள்ளையர்கள் ஜன்னலை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பர்மா காலனியை சேர்ந்தவர் ஆனந்த குமார். 61 வயதாகும் இவர், முன்னாள் பி.எஸ்.என்.எல். ஊழியர் ஆவார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று இவரும், இவரது மகனும் வீட்டினுள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்துக்கு அறையில் எதோ சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அந்த முதியவரோ, தனது மனைவி தான் அந்த அறையில் இருப்பதாக எண்ணி மீண்டும் உறங்கியுள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பதற்றமடைந்த முதியவர், அவரது மகனிடமும், வீட்டின் எதிரில் வசிக்கும் மகளிடமும் கூறியுள்ளார். ஆனால், மகளோ அம்மா தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதனால், குழப்பமடைந்த ஆனந்த குமார், தனது மகனை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறமாக சென்று பார்க்கையில், அந்த அறையிலுள்ள ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த வீட்டின் நபர்கள், ஜன்னல் வழியே உள்ளே சென்று பார்க்கையில், கதவு உள்பக்கம் தாழிட்டு இருப்பதை கண்டனர். மேலும், அந்த அறையில் இருந்த பீரோவில் உள்ள 40 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து முதியவர் ஆனந்தகுமார், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காரைக்குடி வடக்கு போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர்.. யார் இந்த ஷின்சோ அபே..? அவர் ஏன் சுடப்பட்டார்..?

Fri Jul 8 , 2022
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானின் நாரா நகரத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் மார்பில் குண்டு பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.. ரத்த வெள்ள்த்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காலை 11:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஷின்சோ அபேவை சுட்டது தொடர்பாக 41 வயதான டெட்சுயா யமகாமி […]

You May Like