fbpx

தலைமை மருத்துவரை வீடியோ காலில் தொடர்புகொண்ட நீதிபதி..! மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி..!

மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி 24 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சிறுமியை ஏமாற்றி ஒருவர் கர்ப்பம் ஆக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேவையற்ற கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவு வழங்குமாறு மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

தலைமை மருத்துவரை வீடியோ காலில் தொடர்புகொண்ட நீதிபதி..! மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி..!

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை வாட்ஸ் அப் வீடியோ காலில் தொடர்பு கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறுமியின் 24 வார கர்ப்பத்தைக் கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கேட்டறிந்தார். சிறுமியின் உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்தை கணக்கில் கொண்டு கர்ப்பத்தைக் கலைக்க முடியும் என மருத்துவக் கல்லூரி மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து, நீதிபதி மாணவியின் விருப்பத்திற்கு ஏற்ப விரைவில் இந்த கர்ப்பத்தைக் கலைக்க போதுமான மருத்துவத் துறை நிபுணர், உரிய மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

மனைவி குளிக்கும் காட்சியை ஊருக்கே விருந்தாக்கிய கணவன்.. அழைத்துச் சென்று விருந்து வைத்த காவல்துறை...!

Sat Jul 9 , 2022
மும்பையில் மனைவி குளித்ததை வீடியோ எடுத்து அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த ஒருவரை சார் கைது செய்துள்ளனர் குரார் கிராமத்தை சேர்ந்த 28 வயதான பெண் 2015 ஆம் ஆண்டு பிவாண்டியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்தின் போது பெண்ணின் தந்தை கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் மேலும் 5 லட்சத்திற்கும் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like