fbpx

தரதரவென நடுரோட்டில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்.. ஈரோட்டில் பகீர் சம்பவம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவி நேற்று மாலை நேரத்தில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், அவரை ஒரு வாலிபர் வழிமறித்து திடீரென கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தப்பி செல்ல முயன்று கத்தி அலறினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வரவே, அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார். கழுத்து அறுபட்ட நிலையில், மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்,இதனை தொடர்ந்து மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கே மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் இலங்கையின் அகதிகள் முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் நவீன்குமார் (21) என்று தெறிய வந்ததுள்ளது.

மேலும் இவர் ஏற்கனவே இந்த மாணவிக்கு காதல் தொல்லைகளை கொடுத்து போக்சோ சட்டத்தில் கைதாகி தற்போது ஜாமீனில் வந்த நிலையில், அந்த ஆத்திரத்தில் அந்த மாணவியை கொல்ல முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலிசார் தப்பி ஓடிய நவீன்குமாரை தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

’சம்பளத்தில் கை வைத்த இன்ஃபோசிஸ்’..!! திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!! யாருக்கெல்லாம் பாதிப்பு..?

Thu Nov 3 , 2022
இந்தியாவின் 2-வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ் செப்டம்பர் காலாண்டுக்கான ஊழியர்களின் வேரியபிபள் பே தொகையை 60% குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும் நாளுக்கு நாள் புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக உள்ளது. இந்நிலையில் விப்ரோ, கடந்த காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பைப் போலவே இன்ஃபோசிஸ் தற்போது அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் […]

You May Like