தேமுதிக – அதிமுக கூட்டணி.. ஒரே போடாய் போட்ட பிரேமலதா விஜயகாந்த்..!! யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்..

Premalatha Eps 2025

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்.


இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ள நிலையில் முக்கிய கட்சிகளை தங்கள் வசம் இழுக்க திமுக, அதிமுக திட்டம் தீட்டி வருகிறது.

தேமுதிகவை பொருத்தவரை இதுவரையில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் நாங்கள் யாருடன் கூட்டணியில் இணைவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அறிவித்தார். இதற்கிடையே ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

மறுபுறம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைவாரா என்ற யூகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். இது நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே என்றும் அவருடைய தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.

Read more: தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியம்…! முழு விவரம் இதோ

English Summary

DMDK – AIADMK alliance.. Premalatha Vijayakanth made a move..!! A twist that no one expected..

Next Post

வலுக்கட்டாயமாக முன்னாள் காதலிக்கு முத்தம் கொடுத்த இளைஞன்.. நாக்கை கடித்து துப்பிய இளம்பெண்..!

Wed Nov 19 , 2025
A young man who forcibly kissed his ex-girlfriend.. A young woman who bit her tongue and spat it out..!
sex affair 1

You May Like