கடந்த 27ஆம் தேதி கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் விஜய் பார்க்க வந்தவர்கள் துடிதுடித்து உயிரிழந்து கொண்டிருக்க, விஜயோ களத்தில் நிற்காமல் சென்னை வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கரூர் சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் கரும்புள்ளியாக மாறியது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலான்யவு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது. அதிலிருந்து தமிழக வெற்றி கழகம் தற்போது மீண்டு வருகிறது.
கரூர் சம்பவத்தால் முடங்கிப் போன தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தன் கூட்டணி குறித்து அறிவிப்பை விஜய் அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தன்னுடைய கூட்டணி நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை குறிக்கோளை முன்னிறுத்தி, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இருக்க தமிழக வெற்றிக்கலகம் நிர்வாகிகளுக்கு விஜய் புதிய அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம்.
இதன் முதல் படியாக கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படும் ராகுல் காந்தியை விஜய் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இழுப்பதில்தான் சிக்கல் என்றும் கூறப்படுகிறது. வரவிருக்கும் 2026 தேர்தலில் தவெக தலைமையில் தான் கூட்டணி என விஜய் அறிவித்த நிலையில், எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம் பெறும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.



