2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும் எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..
இந்த சூழலில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. குறிப்பாக அமைச்சரவையில் பங்கு என்ற கோரிக்கை உடன் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மதவாத சக்திகளை கூட்டணியில் இணைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெக உடன் கூட்டணி அமைப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது..
உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமண்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.. அடுத்ஹ 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் காமராஜர் கண்ட பொற்காலத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் பாடுபடும் எஎறும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது..
இதையடுத்து தவெகவுக்கு ஆதரவு கடிதத்தை வழங்க காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவின் பனையூர் அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேரும் கையெழுத்திட்ட கடிதத்தை தவெக தலைமையிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுக்க உள்ளனர்.. இதனால் 10 ஆண்டுகள் காலமாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிந்தது..
Read More : மக்களால் நிராகப்பட்டவர்களுடன் துணை நிற்க வேண்டுமா..? மீண்டும் திமுக சீண்டிய மாணிக்கம் தாகூர்..!



