“அடுத்த 40 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தவெக ஆட்சி தான்!” – விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு..!

TVK Vijay 2025

தமிழக அரசியல் களத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து அவரது ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் வெளியிட்டதாக கூறப்படும் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.


ராதன் பண்டிட் கூறியதாக பரவும் தகவலின்படி, “அரசியல் புயல் தற்போது தொடங்கியுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நல்ல தலைவர்கள் உருவாகிறார்கள். அந்த வரிசையில் இப்போது விஜய் வந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக நாம் இந்த காலத்தில் பிறந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ராஜராஜ சோழன், சேரன் செங்குட்டுவன், அசோக சக்கரவர்த்தி போன்றவர்களின் ஆட்சியை நாம் பார்த்திருக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் விஜய் சக்கரவர்த்தியின் ஆட்சியை மக்கள் காண்பார்கள். குறைந்தது அடுத்த 40 ஆண்டுகளுக்கும் விஜய்தான் முதல்வராக இருப்பார்” என கூறியுள்ளார்.

தேர்தல் கணிப்புகளும் வைரல் பேச்சும்: 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் கூறியதாக பரவும் தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகம் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் காலை 9.15 மணிக்கே கட்சி முன்னிலை பெறும் என்றும் அவர் கணித்திருந்தார்.

மேலும், விஜய்யின் ஜாதகம் “சுனாமி போன்ற அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டது” எனவும், கட்சியின் பெயர் எண் கணித ரீதியாக மிகவும் பொருத்தமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

ராதன் பண்டிட் யார்? ராதன் பண்டிட், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம், எண் கணிதம் மற்றும் தியானம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றவர் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் “வெற்றிவேல்” என்ற பெயரில் அறியப்பட்ட இவர், 2008-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்த பிறகு தனது பெயரை ராதன் பண்டிட் என மாற்றியதாக தகவல்கள் உள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆன்மீக ஆலோசகர் எனவும், 1991 தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்தவர் எனவும் சில தரப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இக்கூற்றுகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Read more: Breaking : முறிந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி.. தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு.. காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

English Summary

“The next 40 years will be a time of Thaweka rule in Tamil Nadu!” – Vijay’s astrologer Radhan Pandit’s prediction..!

Next Post

தவெக ஆதரவு எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. செம ஷாக்கில் திமுக..!

Wed May 6 , 2026
TVK support number has increased to 113.. Twist upon twist.. DMK in complete shock..!
vijay 9

You May Like