”கிளி ஜோதிடர் கூறியதை திமுகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை”..!! அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, சாலையோரத்தில் இருந்த கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் எனக் கூறியுள்ளார் கிளி ஜோசியர்.

தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறையினர் கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் கூறிய கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டது பழிவாங்கல் நடவடிக்கை என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் என கிளி ஜோதிடர் கூறியதை திமுகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் பகுத்தறிவு எனக்கூறும் திமுக, கிளி ஜோதிடர் கைதின் மூலம் மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

Read More : தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்..!! எம்ஜிஆரின் வலது கரம்..!! ஆர்.எம்.வீரப்பன் காலமானார்..!!

Chella

Next Post

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா..? படுக்கைக்கு அழைத்த டைரக்டர்..!! ஓபன் டாக்..!!

Tue Apr 9 , 2024
திரையுலகில் பல பெண் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில், 2006ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு மிகச்சிறந்த இயக்குனராகவும் திரைப்பட நடிகையாகவும் விளங்குகிறார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர். ஆரம்ப காலத்தில் இவர் ஆடை வடிவமைப்பாளராகவும், மேலாளராகவும் பணி புரிந்து வந்தார். இதையடுத்து, திரைப்படத் துறையில் தடம் பதிப்பதற்கு முன்பே ஓமனில் மஸ்கட் நகரில் இவரது நிகழ்வு மேலாண்மை வணிகத்தை […]

You May Like