தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் புதிய வியூகங்களுடன் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. 2021 தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அ.தி.மு.கவும், ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் தங்கள் கட்சிக்குள் கொண்டு வரும் வேலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. இதன் மூலம், மாற்றுக்கட்சிகளின் செல்வாக்கை குறைத்து, தங்கள் பலத்தை அதிகரிப்பதே திமுகவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மறுபுறம், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, வரவிருக்கும் தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு புதிய வியூகத்தை வகுத்து, தனது கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு முக்கியமான அசைன்மென்ட் கொடுத்துள்ளார். மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுப்பதே அந்த அசைன்னென்ட்.
இதன் மூலம் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை ஒருங்கிணைத்து, கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதன்படி கரூர் தொன்றிமலை பகுதியை சேர்ந்த திமுக உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர்களை அவர் வரவேற்றார். செந்தில் பாலாஜியின் கோட்டையாக இருக்கும் கரூரில் இருந்து திமுக ஆதரவாளர்கள் கூண்டோடு விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.



