தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது, ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். இன்னொருவர் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.
2 ஆயிரத்துக்கும், 2,500 ரூபாய்க்கும் தான் போட்டி. பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய், முதலில் தவெகவின் கொள்கை என்ன என்பதைக் கூற வேண்டும். அதன் பிறகு தான் பாஜக கொள்கை எதிரியா என்பதை முடிவெடுக்க முடியும். மன நோயாளி மாதிரி குடி நோயாளியாக மாற்றிவிட்டீர்கள், யாருமே டாஸ்மாக்கை மூடவில்லை. என் தம்பி விஜயாவது டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொல்லுவார் என நினைத்தேன்.
மதுவை திறந்துவிட்டு, வீதிதோறும் சாராயக் கடைகளை வைத்துவிட்டு, போதையை ஒழிப்போம் என பேசுவது கேவலம். பாஜகவின் ஏ டீமே திமுக தான். இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்கைத் தக்க வைப்பதற்காக எல்லோரையும் பி டீம் என்று கிளப்பி விடுவார்கள். பாஜகவை காலூன்ற விட்டதே திமுக தான் என்றார்.
Read more: அண்ணாமலை Vs வானதி சீனிவாசன்.. உச்சக்கட்ட மோதல்..! வேட்பாளர் ரேஸில் வெல்லப்போவது யார்..?



