Breaking : என்ன முடிவெடுத்தாலும் திமுக MLAக்கள் கட்டுப்பட வேண்டும்.. ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

mk stalin campaign

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல ஆச்சர்யங்களை கொடுத்தன.. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு இரு பெரும் திராவிட கட்சிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.. தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தவெகவால் ஆட்சியமைக்க முடியவில்லை..


ஒருபுறம் தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் மறுபுறம் அதிமுக தனது எம்.எல்.ஏக்களை புதுச்சேரியில் தங்க வைத்துள்ளது.. அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்களை சந்திக்க புதுச்சேரி சென்றுள்ளார்..

இந்த பரபரப்பான சூழலில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதன்படி, கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. நிலையான ஆட்சி அமைய முடிவெடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

மதவாத சக்திகளுக்கு இடம் தரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

மேலும் இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.. அதன்படி திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வரும் 10-ம் தேதி வரை சென்னையில் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. மேலும் ” சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.. கட்சி நலன் கருதி, மூத்த நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம்.. என்ன முடிவெடுத்தாலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்.. திமுகவின் திட்டங்கள் தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழகத்தின் வளர்ச்சியை தக்க வைக்க முடியும்..” என்று உத்தரவிட்டுள்ளார்..

RUPA

You May Like