” கண்டிப்பாக திமுகவுடன் கூட்டணி கிடையாது..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்..!

Stalin EPS Campaign

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை..


இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. விலை போவதை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. மறுபுறம் திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப் போவதாக ஒரு தகவல் வேகமாக பரவியது.. எனினும் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது..

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்றார்.. மேலும் இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.. அப்போது ” கண்டிப்பாக திமுகவுடன் கூட்டணி எதுவும் கிடையாது என எம்.எல்.ஏக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

பெரும்பான்மை இல்லாத விஜய் முட்டி மோதி இங்கே வருவார் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.. நல்லதே நடக்கும், அனைவரும் பொறுமை காக்கவும் எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்..

Read More : Breaking : என்ன முடிவெடுத்தாலும் திமுக MLAக்கள் கட்டுப்பட வேண்டும்.. ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

RUPA

Next Post

மீனாட்சி அம்மனுக்கு திருமஞ்சன நீர் எங்கிருந்து வருகிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத வரலாறு..!

Fri May 8 , 2026
Do you know where the Thirumanjana water of Meenakshi Amman comes from? A history that many people don't know..!
meenatchi

You May Like