“திமுக ஆட்சி 2.0 என்பது தான் 2026-ல் Headlines.. தமிழ்நாட்டை நாசம் செய்யும் கூட்டத்தை வீழ்த்துவோம்..” முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

mk stalin 2

மாமல்லபுரத்தில் திமுக வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.. அப்போது பேசிய அவர் “ 2026 தேர்தல் தமிழ்நாட்டின் தனித்தன்மையையும், சுய மரியாதையையும் காக்க வேண்டிய தேர்தல்.. இந்த தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டு.. உழைப்பை கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்..


தொழில், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நம் திட்டங்களால் கிடைத்த சாதனைகள் தான் திராவிட மாடலின் அடையாளம்.. இந்தியாவில் எந்த மாநில அரசும் நம் அளவிற்கு சாதனைகளை சாதனைகளை செய்திருக்க மாட்டார்கள்.. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எஞ்சிய வாக்குறுகளையும் விரைவில் நிறைவேற்றி தருவோம்.. திமுக ஆட்சி 2.0 என்பது தான் 2026-ல் Headlines..

சொந்த கட்சியின் உரிமையை அடகு வைத்த அதிமுகவுக்கு, மக்கள் உரிமை பற்றி சிந்திக்க நேரமில்லை.. தமிழ்நாட்டை அழிக்க இன எதிரிகளும், தமிழ் துரோகிகளும் மறைமுகமாக வருகிறார்கள்.. அதிமுகவை அமித்ஷாவிடம் அதிமுக சரண்டர் ஆகிவிட்டது.. பெயர் அளவிற்காவது திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை முழுவதுமாக அமித்ஷாவிடம் சரண்டர் செய்துவிட்டார்.. அதிமுக வைத்துள்ள கூட்டணியை தமிழக மக்கள் மட்டுமல்ல, அந்த கட்சியினரே விரும்பவில்லை.. விசிக வருகிறார்கள், கம்யூனிஸ்ட் வருகிறார்கள், காங்கிரஸ் வருகிறார்கள் என இபிஎஸ் தினமும் சொல்லிப்பார்த்தார்.. இபிஎஸ் தினந்தோறும் அழைத்தும் எந்த கட்சியும் அதிமுக பக்கம் செல்லவில்லை..

மாநில நிர்வாகியாக இருந்தாலும், அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.. திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், பரப்புரயில் ஈடுபடுவேன்.. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனி கூட்டங்களை தினமும் மாலை வேளையில் நடத்த வேண்டும்.. வாக்குச்சாவடி வாரியான நடத்தப்பட்ட கூட்டங்கள் குறித்து தொலைபேசியில் விசாரிக்க உள்ளேன்..

தமிழ்நாட்டில் குறுக்கு வழியாக வெற்றியை ஈட்ட தேர்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்துகிறது.. இதற்காக தொல்லை மேல் தொல்லைகளை பாஜக அரசு கொடுத்து வருகிறது.. பாஜகவின் தாக்குதலை முறியடிக்கும் வல்லமை திமுகவுக்கு தான் உள்ளது..

பாஜகவின் பகல் கனவு பலிக்காது, இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகாலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை நாசம் செய்யும் கூட்டத்தை வீழ்த்துவோம்.” என்று முதலமைச்சர் சூளுரைத்தார்..

Read More : “திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப்‌ போவது உறுதி!” 1 மாதம் கழித்து மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு வந்த விஜய்..

RUPA

Next Post

வீட்டில் உள்ள கேஸ் அடுப்பு பர்னரை எப்படி சுத்தம் செய்வது..? ஈஸி டிப்ஸ் இதோ..!

Tue Oct 28 , 2025
How to clean the gas stove burner at home..? Here are easy tips..!
gas stove burner

You May Like