திமுக இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு ஒத்தி வைப்பு…! அமைச்சர் உதயநிதி திடிர் அறிவிப்பு…!

சேலத்தில் வரும் 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த திமுக இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு, டிசம்பர் 24 ஆம் தேதிக்கு தலைமைக் கழகத்தால் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மிக்ஜாம் புயல் – கனமழை ஏற்படுத்திய வரலாறு காணாத பேரிடரால் சென்னை காஞ்சிபுரம் – திருவள்ளூர் -செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் அவர்கள் – மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அரசு அதிகாரிகள் – கழக நிர்வாகிகள் – இளைஞர் அணியினர் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி நள்ளிரவு முதல் தற்போது வரை நானும் தொடர்ந்து களத்தில் நின்று வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு – மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறேன். குறை கூறுவதற்காக மட்டுமே தலையை வெளியே காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில், மக்களுடன் நிற்பதும் அவர்களைப் பேரிடரிலிருந்து மீட்பதுமே நமது தலையாயப் பொறுப்பு. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுக்குச் செவிமடுத்தும் வன்மத்துடன் வருகின்ற விமர்சனங்களை எதிர்கொண்டும் மக்களுக்கான உதவிகளை, நம் கழகத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த மாபெரும் மீட்பு -நிவாரணப் பணிகளின் காரணத்தால், சேலத்தில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவிருந்த ‘மாநில உரிமை மீட்பு’ முழக்கமான நம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை, டிசம்பர் 24-ஆம் தேதி நடத்துவது. என்று தலைமைக் கழகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கேற்ப இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டச் செயலாளர்கள் இளைஞர் அணியின் மாநில – மாவட்ட ஒன்றிய நகர பகுதி – பேரூர் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

இயற்கைப் பேரிடரிலிருந்து நம் மக்களை இப்போது மீட்போம் – 10 ஆண்டு காலமாக பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தி வரும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்க, டிசம்பர் 24 அன்று சேலத்தில் கூடுவோம்; இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நீங்க மாதவிடாய் நேரத்தில வரும் வலிக்கு மாத்திரை எடுத்துப்பீங்களா.? அப்போ கண்டிப்பா இத படிங்க.!

Sat Dec 9 , 2023
ஒருவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கிறது. சில நேரங்களில் உடல் வலி மற்றும் அதிகப்படியான வலியை குணப்படுத்துவதற்கு வழி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறோம். சில நேரங்களில் இந்த மருந்துகளில் இருக்கும் எதிர் விளைவுகள் காரணமாக நமக்கு வேறொரு நோய் அல்லது பாதிப்பு ஏற்படலாம். இதேபோன்று பெண்கள் மாதவிடாய் வலி சுழற்சியின் போது ஏற்படும் வலியை கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் […]

You May Like