நலம் தரும் இயற்கை சாம்பிராணி!… எத்தனை அதிசயங்கள் தெரியுமா?…

கர்ப்பப்பை பிரச்சனைகளை தீர்க்கும், கிருமிகளை அழிக்கும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள இயற்கையான சாம்பிராணி பற்றி இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம்.

இயற்கையாக மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணிகளை பயன்படுத்தி வந்தால், தீய சக்திகள் அண்டாது, நுண் கிருமிகளை அழிக்கும், மனச்சோர்வு, கவலை இருக்கும்போது சாம்பிராணி புகை போட்டால் நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே விலகி ஓடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், தொடர்ந்து இறைவனுக்கு சாம்பிராணி போட்டு வந்தால் நமது வாழ்க்கையும் கூட நறுமணத்துடன் இருக்கும் என்றும் நம்பி வருகிறோம். ஆனால், உண்மையில் சாம்பிராணி போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை பல நன்மைகள் அடங்கியுள்ளது என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். மேலும், இன்றைய காலகட்டத்தில் பலர், இயற்கையான சாம்பிராணியை பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், இதற்கு பதிலாக கம்ப்யூட்டர் சாம்பிராணியை வாங்கி உபயோகப்படுத்தி வருகிறனர். ஆனால், இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

சாம்பிராணி என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து (சாம்பிராணி மரம்) வடியும் பால் மூலம் தயாரிக்கப்படும் பிசின் ஆகும். இது மிக மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடையது. இந்தச் சாம்பிராணிக்கு ஆனது குமஞ்சம், குங்கிலியம் மரத்து வெள்ளை, பறங்கிச் சாம்பிராணி, வெள்ளைக் கீரை என்று பல பெயர்கள் உண்டு. இச்சாம்பிராணியை எரித்தால் மிகுந்த மணத்தைப் பரப்பும்.

சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைப்பகுதிகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது.இவ்வகை மரங்கள் அதிக உறுதித் தன்மை மிக்கவை. எனினும் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும் என்பதால், இதன் மூலம் தீக்குச்சிகளும், சாம்பிராணி மரத்தில் இருந்து எடுக்கப்படும் விதைகளின் எண்ணெயில் இருந்து சோப்பு மெழுகுவர்த்தி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும்.

சாம்பிராணி மரத்தை வீட்டில் வளர்த்தினால், அது காற்றின் வேகத்தை தடுத்து, காற்றை சுத்திகரித்து நமக்கு அளிக்கும். இதில் இருந்துவரும் புகையில், Boswellic acid உள்ளதால், உடலுக்கு ரொம்ப நல்லது. குறிப்பாக பெண்களின் கருப்பப்பை பிரச்சனைகள் சரியாகு, அதன் பிசினையும் நாம் சுவாசிப்பதால், மார்பு சளி, இருமல் சரியாகும் எனவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

குடலில் சேரும் வாயுவை அகற்றவும், வயிற்றுப்போக்கு போன்றவற்றைப் குணப்படுத்தவும் சாம்பிராணி ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பாலுடன் கலந்து சாம்பிராணித் தூளை குடிப்பது ஆண்களுக்கு பாலியல் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும், விறைப்புத்தன்மையை நீண்ட நேரம் நீட்டிக்கவும் பயன்படுகிறது.

Kokila

Next Post

ட்விட்டர் ப்ளூடிக் இந்தியாவில் அறிமுகம்!.... விலை மற்றும் வசதிகள் இதோ!

Fri Feb 10 , 2023
Twitter Blue சந்தா சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ கிடைக்கிறது. இதுவரை, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை கிடைத்து வந்தது. இந்தநிலையில், தற்போது இந்தியாவிலும் ட்விட்டர் ப்ளூ சந்தா அதிகாரப்பூர்வமாக […]

You May Like