இந்து சமயத்தில் நவகிரக வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெரும்பாலான சிவன் கோவில்களில் நவகிரக சன்னதி கட்டாயமாக காணப்படும். ஆனாலும், தமிழகத்தில் சில புகழ்பெற்ற சிவன் கோவில்களில் விதிவிலக்காக நவகிரக சன்னதி இல்லாதது ஆச்சரியமாகும்.
பண்டைய சாஸ்திரங்களின் படி, எங்கு எமன் சிவனை வழிபட்டாரோ அந்த தலங்களில் நவகிரகங்கள் இருக்காது என நம்பப்படுகிறது. காரணம், பிரபஞ்ச சக்திகளின் எல்லாம் ஆதியுமாகிய சிவபெருமான் முன் நவகிரகங்களுக்கு தனி இடமில்லை என்பதே ஆகும்.
நவகிரக சன்னதி இல்லாத சிவன் கோவில்கள்:
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்: இங்கு எமன் சிவனை வழிபட்டதால் நவகிரகம் இல்லை.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில்: இதுவும் எமதர்மன் வழிபட்ட தலம் என்பதால் நவகிரகம் இல்லை.
ஸ்ரீவாஞ்சியம் கோவில்: இங்கு எமதர்மனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் நவகிரகம் கிடையாது.
திருப்பைஞ்சீலி (திருச்சி அருகே): வாழைமரம் தலவிருட்சமாக உள்ள இத்தலத்தில் எமனுக்கு தனி சன்னதி உள்ளது; நவகிரகம் இல்லை.
காளஹஸ்தி: இங்கு 27 நட்சத்திரங்களை குறிக்கும் 9 படிகள் கொண்ட தங்க ஏணி உள்ளது; நவகிரக சன்னதி கிடையாது.
திருவையாறு அருகில் உள்ள திருமழப்பாடி: இங்கும் நவகிரகம் இல்லை.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்: மார்க்கண்டேயனை காப்பாற்றிய இடம். எமனுக்கு சிவன் உயிரை எடுக்கும் அதிகாரம் மறுபடியும் வழங்கியதால் இங்கு நவகிரகம் இல்லை.
திருவெண்காடு: சிதம்பர நடராஜரைவிட பழமையான நடராஜர் இங்கு உள்ளார். நவகிரக சன்னதி இல்லாத முக்கிய தலம்.
திருப்புறம்பியம்: இங்கும் நவகிரகம் இல்லை.
இந்த தலபுராணங்களின் படி, நவகிரகங்கள் உட்பட பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் சிவனுக்குள் அடங்கும் என்பதே இவ்விதிவிலக்கின் காரணம். பக்தர்கள் இத்தலங்களை தரிசிக்கும்போது நேரடியாக சிவபெருமானின் அருளைப் பெறுவதாக நம்பப்படுகிறது.
Read more: OYO-வின் முழு அர்த்தம் இதுதானா..? அட.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!