நாட்டிலேயே அதிக கொலைகள் நடந்தது எந்த மாநிலத்தில் தெரியுமா..? அதிர்ச்சி தகவல்..

நாடு முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.. இந்நிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) படி, 2021ல் பதிவான கொலை வழக்குகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.. அதன்படி இந்தியாவில் மொத்தம் 29,272 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020ல் 29,193 ஆகவும், அதற்கு 2019-ம் ஆண்டு 28,915 ஆகவும் இருந்தது. மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,132 ஆகவும் இருந்தது..

ஆனால் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக 29,272 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.. அதாவது சராசரியாக ஒரு நாளில் நாளும் 82 கொலைகள் நடந்துள்ளன.. உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 3,717 கொலைகளும், பீகாரில் 2,799 மற்றும் மகாராஷ்டிரா 2,330 கொலைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளில் முதலிடத்தில் உள்ளன.

2019 ஆம் ஆண்டு உ.பி.யில் 3,806 கொலை வழக்குகள்; பீகாரில் 3,138 வழக்குகள்; மற்றும் மகாராஷ்டிராவில் 2,142 வழக்குகளும் பதிவாகி இருந்தது… இந்தியாவின் குற்றத் தலைநகராக டெல்லி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டெல்லியில் 2021-ல் 451 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.. 2021 ஆம் ஆண்டில் மெட்ரோ நகரங்களில் மொத்தம் 1,955 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன..

Maha

Next Post

கனியாமூர் கலவரத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு எவ்வளவு..? வெளியானது முழு விவரம்..!

Tue Aug 30 , 2022
கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் ஏற்பட்ட மொத்த இழப்பீடுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இதையடுத்து, மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்ற நிலையில், கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதில், பள்ளிகள், வாகனங்கள், கணினிகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி […]
கனியாமூர் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்துகிறதா..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

You May Like