இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சார்ந்த விஷயங்களில் வாழ்வதற்கு மக்கள் வேகமாகப் பழகிவிட்டனர். எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு தீமைகளும் இருக்கின்றன. அனைவரிடமுமே ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் உலகின் எந்த இடத்தில் என்ன நடந்தாலும் அதை அமர்ந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.
சமூக வலைதளங்களில் நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் நமக்கு புகைப்படங்கள், செய்திகள், மீம்கள் போன்ற பலவற்றை அனுப்புவார்கள். முன் பின் தெரியாத நபர்கள் அல்லது நிறுவனங்களில் இருந்து கூட மெசேஜ் வரும். இதை நீங்கள் சாதாரணமான ஒன்றாக நினைக்கலாம். ஆனால் அந்த மெசெஜை க்ளிக் செய்தால் நம் அக்கவுண்டில் உள்ள மொத்த பணமும் போயிடும். குறிப்பாக போலியான sms, போன் கால் மற்றும் இமெயில் மூலமாக பலவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
அப்படி ஒரு மோசடி தான் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Download e-PAN Card என உங்களுக்கு இ-மெயில் வந்தால் அதனை நம்ப வேண்டாம் என்று PIB Fact Check தெரிவித்துள்ளது. இதுபோன்ற எந்த ஒரு இ-மெயிலும் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்படியான மெயில் வந்தால் அதில் உள்ள எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். இதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும், அக்கவுண்டில் உள்ள பணம் திருடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more: ‘உத்தரபிரதேச டைகர்’ என அழைக்கப்படும் மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்..!!