“Lok Sabha தேர்தல் தேதி அறிவித்த பின் இதை மட்டும் செய்யாதீங்க”..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முன் தேதியிட்டு அறிவிப்பு அரசாணை வெளியானதால் சர்ச்சை வெடித்தது. துறைகளின் செயலர்கள் அரசாணை தொடர்பான பதிவேட்டில் இறுதி அரசாணை வெளியிட்ட பின் ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும்.

ஒரு கோடிட்டு முடிப்பதை நகல் எடுத்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம். கோடிட்டு முடித்த அரசாணை நகலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள்ளாக அனுப்ப வேண்டும்” என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Read More : Helmet | இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம்..? போக்குவரத்துத்துறை அதிரடி..!! வெளியான அறிவிப்பு..!!

Chella

Next Post

முதுகு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விளாம்பழம்…!

Sat Mar 2 , 2024
vilambalam: பொதுவாக பலவகையான ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை நாம் சாப்பிட்டு இருந்தாலும் பலரும் விளாம்பழத்தை சாப்பிட்டிருக்க மாட்டோம். ஆனால் இந்த விளாம்பழத்தில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. இந்த பழம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் பாதிக்காமல் பாதுகாக்கிறது. மேலும் இந்த விளாம்பழம் உடலில் என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதை குறித்து பார்க்கலாம்? 1. விளாம்பழம் […]

You May Like