’டாஸ்மாக் சரக்கை குடிக்க வேண்டாம்’..!! ’கள் குடியுங்கள்’..!! பாஜக தலைவர் அண்ணாமலை அட்வைஸ்..!!

மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை ஆனைகட்டி பகுதியில் தேர்தல் பரப்புரையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ”குடியினால் எல்லோருக்கும் பிரச்சனை ஏற்படும். கள் குடியுங்கள், டாஸ்மாக் வேண்டாம். ஒரு டாஸ்மாக் கடையை அல்ல, எல்லா டாஸ்மாக் கடையையும் அகற்ற அரசியலுக்கு வந்துள்ளோம். டெல்லிக்கு போற ஒரே வண்டி இந்த வண்டிதான், மற்றவை எல்லாம் லோக்கல் வண்டி. பழங்குடியின மக்களின் பாதுகாவலனாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். டாஸ்மாக் சரக்கை குடிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கிய அவர், குடிக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும்” என்றார்.

Read More : Drugs | போதைப் பொருள் கடத்தல் வழக்கு..!! இயக்குனர் அமீரிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!!

Chella

Next Post

’உத்தரவை மீறிவிட்டு மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்க முடியும்’..? பதஞ்சலி நிறுவன வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்..!!

Tue Apr 2 , 2024
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஆஜரான பாபா ராம்தேவ், நிறுவனத்தின் மீடியா பிரிவுதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர். அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்ன?. எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? […]

You May Like