’சொந்தமா கார் கூட இல்லையாம்’..!! தமிழிசையின் சொத்து மதிப்பு எத்தனை கோடி..?

இரு மாநிலங்களின் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு சொந்தமாக கார் கூட இல்லையாம். அவருடைய சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பாஜக வேட்பாளர் தமிழிசையும் நேற்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில், தமிழிசையின் சொத்து பட்டியலையும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை பெயரில் அசையும் சொத்துகள் ரூ 1.57 கோடி என்றும் சொந்தமாக கார் கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள பரிசோதனை இயந்திரம், ஸ்கேன் இயந்திரம் உள்ளதாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழிசையின் கணவர் பெயரில் மொத்தம் ரூ.3.92 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும் மகள் பெயரில் ஒரு கோடி ரூபாயில் அசையும் சொத்து உள்ளதாகவும் 4 கார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

தமிழிசையின் பெயரில் 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும், அவரது கணவர் பெயரில் 13.70 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், மகள் பெயரில் 70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிசை சௌந்தரராஜன் பெயரில் 58 லட்சமும், அவரது கணவர் பெயரில் 3.35 கோடி ரூபாயும் மகள் பெயரில் 3.41 கோடி ரூபாயும் கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More : விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வேட்புமனுவில் இருந்தது என்ன..?

Chella

Next Post

Earthquake | திருவாரூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்..? அலறியடித்து ஓடிய மக்கள்..!! நடந்தது என்ன..?

Tue Mar 26 , 2024
வெளிமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பலத்த சத்தம் கேட்டதால், அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள், பொதுமக்கள் அலறி அடித்து வெளியேறினர். இந்த நிலநடுக்கம் எவ்வளவு […]

You May Like