”எனக்கே வாய்ப்பு தரல”..!! ”நான் எதுக்கு கட்சியில இருக்கணும்..!! முன்னாள் MLA அதிரடி விலகல்..!!

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார். இதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் ஜிகே வாசன் அறிவித்தார்.

எனினும், கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர் யாரை அறிவிக்கலாம் என ஜிகே வாசன் ஆலோசித்து வந்தார். திமுக சார்பில் தற்போதைய சிட்டிங் எம்பியாக இருக்கும் கனிமொழி போட்டியிடுவதால், தூத்துக்குடி தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் அதிமுக தரப்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இந்நிலையில், தான் தூத்துக்குடி தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், விஜயசீலன் போட்டியிடுவார் என்று ஜிகே வாசன் அறிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த கதிர்வேல், அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். தூத்துக்குடி வேட்பாளராக விஜயசீலன் போட்டியிடும் நிலையில், அதிருப்தியடைந்த கதிர்வேல், கட்சியில் இருந்தே விலகியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் சீட் வாங்கி, அதனை அதிக விலைக்கு ஜி.கே.வாசன் விற்று வருகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Read More : Crime | வெளிநாட்டில் பழக்கம்..!! கோவையில் வாடகை வீடு..!! ஏற்காட்டில் கிடந்த பெண்ணின் உடல்..!! வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

Chella

Next Post

Gold Rate | உச்சம் தொட்ட தங்கத்தின் விலை..! ஒரே நாளில் ரூ.160 அதிகரிப்பு..!

Mon Mar 25 , 2024
தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் அடையாளத்திற்காகவும், சேமிப்பிற்காவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம் தான். தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. அதன்படி […]

You May Like