தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போது அனல் பறக்க தொடங்கி உள்ளது.. பிரதான கட்சியான அதிமுக பல அணிகளாக பிரிந்துக் கிடக்கும் நிலையில், அதிமுகவை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார்.. மேலும் கட்சியை ஒருங்கிணைக்கு பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என காலக்கெடுவும் விதித்தார்.. இதனிடையே ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அதிமுகவை ஒன்றிணைக்க அவர்களும் ஓ.கே சொல்லிவிட்டதாகவே கூறப்பட்டது..
இப்படி, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நேற்று டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேசினார்.. சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் தனியாக 20 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அதிமுகவில் பிரிந்திருக்கும் அணிகள் இணைப்பு தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. 2021 தேர்தலின் போதே நான் இதை தான் கூறினேன்.. அப்போதே நான் சொல்வதை கேட்டிருந்தால் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும்.. எனவே அதே தவறை 2026 தேர்தலிலும் செய்ய வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
எனினும் அணிகள் இணைப்புக்கு இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. அவர்கள் எங்கள் கட்சியை முடக்க வேண்டும், கட்சியை அழிக்க வேண்டும் என்று செயல்பட்டவர்கள், எனவே அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.. மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டாம் என இபிஎஸ் அமித்ஷாவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது
எனவே அணிகளை இணைப்பது குறித்து அமித்ஷா நடத்திய சமரச பேச்ச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.. கூட்டணியை வலுவழக்க செய்யும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என அமித்ஷா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் அதிமுக – பாஜக கூட்டணியின் வெற்றிக்கு என்னென்ன விஷயங்கள் தடையாக உள்ளது? அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பில் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..