மாதம் ரூ.75,000 சம்பளத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!! கொட்டிக் கிடக்கும் ஆசிரியர் பணியிடங்கள்..!! இன்றே கடைசி..!!

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணிக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு ரூ.75,900 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கான தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் உடனே விண்ணப்பம் செய்ய வேண்டிது அவசியம் ஆகும்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், வேளாண் பயிற்றுநர்கள், தொகுதி கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பணியிடங்களை ஆண்டு தோறும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teacher) பணியிடங்ளை நேரடியாக நிரப்பப்படுகிறது. இதில் 1,729 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 39 பணியிடங்கள் Backlog முறையில் வைக்கப்பட்டிருக்கிறது

கல்வி தகுதி : போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதியை பொறுத்தவரை 12ஆம் வகுப்பு முடித்து D.El.Ed, D.Ed, B.El.Ed படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சம்பளம் : பணிக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் மாதம் ரூ.75,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு : 53 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிகளின் படி வயது சலுகை வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 01.07.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். அதேநேரம் பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ மற்றும் எஸ்.டி பிரிவினர் 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி..? தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் இன்று (மார்ச் 20) மாலை 5 மணிக்குள் https://www.trb.tn.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறை : தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்க்காணல் ஆகிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். OMR Based தேர்வானது வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : இனி மூன்றே தவணைகளில் ரூ.14,000..!! கர்ப்பிணி பெண்களுக்கு இனிப்பான செய்தி..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Chella

Next Post

’அது வெறும் பங்காளி சண்டை தான்’..!! ’2026இல் எல்லாம் ஒன்னு சேர்ந்துருவோம்’..!! சசிகலா நம்பிக்கை..!!

Wed Mar 20 , 2024
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டை வட்டம் சீதாம்பாள்புரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய வி.கே. சசிகலா, செய்தியாளர்களிடம் பேசுகையில், ”என்னைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும். மூன்று அணியாக இருக்கின்ற […]

You May Like