’மாணவர்களின் சந்தோஷத்தை கெடுக்காதீங்க’..!! ’எந்த பள்ளியிலும் இது நடக்கக் கூடாது’..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாா்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத்தோ்வு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடா்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தத் தோ்வுகள் ஏப்ரல் 12ஆம் தேதி முடிக்கப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

இதற்கிடையே, 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 10, 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் ரம்ஜான் பண்டிகையையொட்டி மாற்றி வைக்கப்பட்டன. தேர்தல் நடைபெறுவதன் காரணமாக அந்த 2 தேர்வுகள் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் இறுதித் தோ்வுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. அதைத்தொடா்ந்து மாணவா்களுக்கு இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் நேற்று மாலை முதலே உற்சாகத்துடன் தங்கள் கோடை விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ”பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும், மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக்கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி..!! இனி வெறும் ரூ.3-க்கு தண்ணீர் பாட்டில் கிடைக்கும்..!! உணவு விலையில் கம்மிதான்..!!

Chella

Next Post

இந்தியர்களுக்கு மட்டும் பொருந்தும் பிரத்யேக ஷூ!… ’பா’ என்றால் என்ன?

Wed Apr 24 , 2024
‘Bha’: இந்தியர்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் பா அளவு காலணி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தேவை ஏன் உணரப்பட்டது, தற்போதுள்ள காலணி அளவு அமைப்புகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடும்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பல தசாப்தங்களாக, இந்தியர்கள் பொருத்தமற்ற காலணிகளுடன் போராடி வருகின்றனர், வெளிநாட்டு அடிப்படையிலான காலணி அளவு தரநிலைகளால் முற்றிலும் அசௌகரியத்துடன் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இப்போது, ​​இந்தியர்கள் விரைவில் ‘பா’ எனப்படும் ஷூ […]

You May Like