“ஆபரேஷன் வீட் அவுட்” நாடு முழுவதும் அதிரடி சோதனை… சிக்கிய 108.67 கிலோ கஞ்சா…!

ganja 2026

“ஆபரேஷன் வீட் அவுட்”- ன் கீழ் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 108.67 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் “ஆபரேஷன் வீட் அவுட்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 13-14, 2025 அன்று 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் நீரில் வளரக்கூடிய போதை தரும் தாவர வகைகளைப் பறிமுதல் செய்தது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், பாங்காக்கிலிருந்து வந்த இரண்டு இந்தியர்களை இயக்குனரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களது உடமைகளை சோதனை செய்ததில் 39.2 கிலோ எடையுள்ள போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விரைவான நடவடிக்கையினால் அதன் பெறுநர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு வழக்கில், தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட 7.8 கிலோ எடையுள்ள போதைப்பொருளை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டார்கள். 2025 ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 12 வரையிலான காலகட்டத்தில், தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்ட 61.67 கிலோ போதைப்பொருட்களை டிஆர்ஐ அதிகாரிகள் தனித்தனியாக பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 108.67 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இதயத்தின் நண்பன்..!! தினமும் ஒரு கைப்பிடி போதும்..!! வேர்க்கடலை சாப்பிடுவதால் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!!

Wed Sep 17 , 2025
வேர்க்கடலை என்பது சுவையான சிற்றுண்டி மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகவும் இருக்கிறது. எனவே, தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதய ஆரோக்கியம் : வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கின்றன. இதனால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. நீரிழிவு நோய் : இதில் உள்ள நார்ச்சத்து […]
Peanut 2025

You May Like