உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படும் பானங்களில் ஒன்று காபி. இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் இதை தூக்கத்தை களைப்பதற்காக அல்லது சக்தி பெறுவதற்காக குடிப்பார்கள். ஆனால் மனநலப் பிரச்சனைகள் கொண்டவர்கள் அளவோடு காபி குடித்தால், அவர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ உதவக்கூடும் என்று புதிய ஆய்வு சொல்கிறது..
லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் தினமும் நான்கு கப் காப்பி வரை குடிப்பவர்கள், மனநல நோய்கள் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களிடம் டெலோமியர்கள் நீளமாக காணப்பட்டன. டெலோமியர்கள் என்பவை நமது குரோமோசோம்களின் கடைசிப் பகுதிகளில் இருக்கும் “காப்புக் கவசங்கள்”. வயதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய குறியீடாக கருதப்படுகின்றன. டெலோமியர்கள் நீளமாக இருக்கும் போது உயிரணுக்கள் இளமையாக இருக்கின்றன.
ஆய்வு என்ன கண்டது?
சுமார் 500 பேரின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. தினமும் 3 முதல் 4 கப் காபி குடித்தவர்களுக்கு, காபி குடிக்காதவர்களை விட சுமார் 5 ஆண்டுகள் இளமையான உயிர் வயது (biological age) இருப்பதாக தெரிந்தது. ஆனால் தினம் 4 கப்புக்கும் அதிகம் குடிப்பவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக உடலின் உயிரணுக்கள் அதிக அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகள், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கூறும் வழிகாட்டுதலுடனும் பொருந்துகிறது. அவர்கள் தினமும் 400 மில்லிகிராம் காஃபின் — அதாவது சுமார் 4 கப் காப்பி தான் பாதுகாப்பான அளவு என்று பரிந்துரைக்கிறார்கள்.
இந்த ஆய்வின் தலைமை ஆசிரியர் டாக்டர் விட் ம்லாகர் பேசிய போது “ பொதுமக்களில் காப்பி உயிரணு முதிர்வை மெதுவாக்கும் என்று நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். ஆனால் கடுமையான மனநல நோய்கள் உள்ளவர்களுக்கு, காப்பி என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது பற்றி இதுவரை மிகக் குறைவாகவே தெரியுமே.
இந்தக் குழுவினரின் ஆயுட்காலம் ஏற்கனவே குறைவாக உள்ளது; அதற்குக் காரணங்களில் ஒன்று வயது சார்ந்த நோய்களும் ஆகும். ஆகவே இந்த ஆய்வு மிக முக்கியமானது” என்று தெரிவித்தார்..
நான்கு கப் காபி நீண்ட ஆயுளுக்கு எப்படி உதவுகிறது?
வயது அதிகரிக்கும் போது இயற்கையாகவே டெலோமியர்கள் குறைந்து கொண்டே போகின்றன. ஆனால் சிக்கோஃப்ரீனியா, பைபோலார் டிஸ்ஒர்டர் போன்ற கடுமையான மனநல பிரச்சினைகள் உள்ளவர்களிடம் இந்த குறைதல் இன்னும் வேகமாக நடக்கிறது. இதன் காரணமாக இவர்கள் சராசரியாக மற்றவர்களை விட ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக முன்பே இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் இதய நோய்கள், புற்றுநோய் போன்ற வயதுடன் தொடர்புடைய நோய்களே. டைலோமியர்கள் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ், அழற்சி போன்றவற்றுக்கு மிகவும் சென்சிட்டிவாக இருப்பதால் அவை வேகமாக சேதமடைகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் காபியில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட், ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி (அழற்சி குறைக்கும்) சேர்மங்கள் செல்களை kuliyal (wear and tear) இலிருந்து பாதுகாக்க உதக்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..
“காபி என்பது பலரும் தினமும் குடிக்கும் பானம்,” என்று கிங்ஸ் கல்லூரி லண்டனின் ஆராய்ச்சி பெருந்துணை மொனிக்கா ஆஸ் கூறியுள்ளார். மேலும் “ஒருபுறம், அதிக அளவு காபி குடிப்பது தூக்கத்தைக் குறைப்பது போன்ற எதிர்மறை விளைவுகளை உருவாக்கலாம். ஆனால் மற்றுபுறம், ஒரு அளவுக்குள் இருக்கும் காபி குடிப்பது உயிரியல் முதிர்வுக்கு நல்ல விளைவுகளை தரலாம் என்பதையே எங்கள் புதிய ஆய்வு காட்டுகிறது,” என்றும் அவர் கூறினார்.
அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்ன நடக்கும்?
அதிக அளவில் காப்பி குடிப்பதால், அமைதியின்மை, பதட்டம் (Anxiety), தூக்கமின்மை (Insomnia), இதய துடிப்பு அதிகரிப்பு (Increased heart rate) போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.. மேலும் சிலருக்கு மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகள், தலைவலி, தசை நடுக்கம் (Muscle tremors) போன்றவை ஏற்படலாம்.
அரிதான சந்தர்ப்பங்களில் மிக அதிகமான கஃபீன் அளவு உட்கொண்டால். குழப்பம் (Confusion) வயிற்று கோளாறு, குமட்டல், வலிப்பு நோய் ஆபத்து அதிகம்.. இது, இதய துடிப்பை அதிகரிக்கிறது, இதயத்தில் துடிப்பு பிதுக்கல் (Palpitations) ஏற்படும், ரத்த அழுத்தம் தற்காலிகமாக அதிகரிக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி, அடிக்கடி சிறுநீர் போவது போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்..
Read More : கவனம்..! உங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், அது ஆபத்தான நோயாக இருக்கலாம்!



