’யாரை கேட்டு டி.ஆர்.எஸ். கொடுத்தீர்கள்’? அம்பயரிடம் கடுப்பான பாபர் அசாம்..!

‘நான் தானே இங்கு கேப்டன், நீங்களாக முடிவெடுத்து எதற்கு டி.ஆர்.எஸ். கொடுத்தீர்கள்’ என்று அம்பயரை நோக்கி ஆக்ரோஷமாக கேட்டார் பாபர் அசாம்.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

’யாரை கேட்டு டி.ஆர்.எஸ். கொடுத்தீர்கள்’? அம்பயரிடம் கடுப்பான பாபர் அசாம்..!

இந்நிலையில், இந்த போட்டியின்போது பாபர் அசாம் அம்பயரிடம் கோபமாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இலங்கை அணியின் இன்னிங்ஸின் போது ஆட்டத்தின் 16வது ஓவரில், நிஷங்கா பேட்டிங் செய்ய, ஹஷன் அலி பந்து வீசினார். ஷார்ட் பிட்சாக போடப்பட்ட முதல் பந்து நிஷங்கா பேட்டில் பட்டு கேட்ச் ஆகியுள்ளது என்று நினைத்த பவுலரும், விக்கெட் கீப்பர் ரிஸ்வானும் தாங்களாகவே முடிவு செய்து கொண்டு அம்பயரிடம் டி.ஆர்.எஸ் கேட்டனர். எனினும் கேப்டன் பாபர் அசாம் டி.ஆர்.எஸ் கேட்கவில்லை. ஆனால், அம்பயர் அவராகவே டி.ஆர்.எஸ்-க்கு முறையிட்டு சிக்னல் காட்டினார். இது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.  

பந்தை ஆய்வு செய்த 3வது நடுவர் ‘நாட் அவுட்’ என்று முடிவு கொடுத்தார். இதனால் ஒரு டி.ஆர்.எஸ்-ஐயும் பாகிஸ்தான் அணி இழந்தது. இதனால், கோபமடைந்த பாபர் அசாம், ‘நான் தானே இங்கு கேப்டன், நீங்களாக முடிவெடுத்து எதற்கு சிக்னல் காட்டுகிறீர்கள். நான் உங்களிடம் கேட்டேனா?’ என்பது போன்று வீரர்கள் மற்றும் அம்பயரை நோக்கி ஆக்ரோஷமாக கேட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...? மத்திய சுகாதாரத்துறை புதிய தகவல்...!

Sun Sep 11 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,076 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,322 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா..!! இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா..? உடனே இதை பண்ணுங்க..!!

You May Like