மனைவிக்கு மோமோஸில் போதை மருந்து கலந்து கொடுத்து, இரண்டு ஆண்களுடன் சேர்ந்து கணவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் ரயில்வே மேம்பாலம் அருகே கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து, சிவில் லைன்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுய நினைவுக்கு திரும்பினார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. தனது கணவர் தன்னை சந்தைக்கு அழைத்துச் சென்று, மோமோஸ் வாங்கி தந்ததாகவும், அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்ததாகவும் அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்தார். மயக்கத்தில் இருந்தபோது மூவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் சாலையோரத்தில் விட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விசாரணையில் மோமோஸில் போதை பொருள் கலந்தது தெரியவந்தது. பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கணவன் உள்ளிட்ட மூன்று பேர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை, குற்றவியல் சதி மற்றும் தவறான அடைத்து வைத்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.