எனது கணவர் போல… உங்களுடன் ஒருவராக இருக்க ஆசை…! துர்கா ஸ்டாலின் கருத்து…!

Durga 2025

எனது கணவர் போல் நானும் உங்களுடன் ஒருவராக இருக்கவே ஆசைப்படுகிறேன் என துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் நேற்று உயிர்மை பதிப்பகம் சார்பாக துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும் – பாகம் 2” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நூலினை எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் வெளியிட, முதல் பிரதியை டாபே குழுமத்தின் இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய துர்கா ஸ்டாலின்; தளபதியும் நானும்” என்று இருந்த இந்த புத்தகம் “அவரும் நானும்” என்று மாறியதை குறிப்பிட்டு , “எனக்கும் என் கணவருக்கும் இடையேயான 50 வருட வாழ்வின் பல தருணங்களை தொகுப்பாக்கிய இந்த புத்தகத்திற்காக கட்சி தலைவராகவும் முதல்வராகவும் இருந்தாலும் கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையே எனக்காக நேரம் ஒதுக்கி புத்தகத்தில் உள்ளவற்றை சுட்டிக்காட்டிய… இந்த புத்தகம் வெளிவர முழு காரணமாக இருந்த எனது கணவருக்கும் முதல் நன்றி.

எனது கணவர் போல் நானும் உங்களுடன் ஒருவராக இருக்கவே ஆசைப்படுகிறேன். முதல் பாகம் வெளிவந்தபோது சிறு குழந்தைகளாக இருந்த எனது பேரக்குழந்தைகள் இன்று இந்த புத்தகத்தை மேடையில் பெற்றுக்கொண்டதில் பாட்டியாக முழு திருப்தி அளிக்கிறது . சிறுவயதில் நான் விரும்பி படித்த எழுத்தாளர் சிவசங்கரி மூலம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டது ரொம்பவே சிறப்பு என்றார்.

Vignesh

Next Post

உங்கள் கண்கள் மஞ்சள் நிறமாக தோன்றுகிறதா?. அலட்சியம் வேண்டாம்!. கல்லீரல் அழுகும் அறிகுறி!

Tue Jul 22 , 2025
கல்லீரல் சிரோசிஸ் என்றால் என்ன ? கல்லீரல் சிரோசிஸ் ஒரு சைலண்ட் கில்லராக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நோய் எந்த குறிப்பிட்ட அறிகுறிகளும் இல்லாமல் ஆபத்தை கொடுக்கும். ஆரம்ப கட்டங்களில் அதைக் கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஏனெனில் இந்த நோய் தாமதமாகக் கண்டறியப்பட்டால், கல்லீரல் முற்றிலும் சேதமடைந்துவிடும். கல்லீரல் தொடர்ந்து சேதமடையும் போது சிரோசிஸ் ஏற்படுகிறது. கல்லீரல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், மீண்டும் மீண்டும் காயமடைந்தால் புதிய செல்கள் […]
liver cirrhosis 11zon

You May Like