அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர். ஆர். என். ரவியை சந்தித்தார்.. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து ஆளுநரிடம் அவர் மனு அளித்ததாக கூறப்படுகிறது.. ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “ திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தோம். 2021-ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்.. திமுகவின் ஊழல் நிறைந்த ஆட்சியில் நடந்த ஊழல்களின் விவரங்களை ஆளுநரிடம் வழங்கி, இந்த ஊழல்களுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம்..
கடந்த 56 மாதங்களாக ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளி உள்ளது. வருடத்திற்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கி, சுமார் 4 லட்சம் கோடி கடனை அதிகரித்துள்ளதே இந்த திமுக அரசின் சாதனை.. ஊழல் செய்வதை தவிர, தமிழக மக்களுக்கு இவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை.. அரசின் பல்வேறு துறைகளில் மிக அதிக அளவில் ஊழல் செய்துள்ளது என்பதை ஆளுநருக்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.. துறை வாரியாக எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம்..
நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை : 64,000 கோடி
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை : 60,000 கோடி
சுரங்கம், கனிமவளத்துறை : 60,000 கோடி
எரிசக்தி துறை : 55,000 கோடி
டாஸ்மாக், கலால் வரி : 50,000 கோடி
பத்திரப்பதிவு துறை : ரூ.20,000 கோடி
நெடுஞ்சாலை துறை : ரூ.20,000 கோடி
நீர் ஆதாரத்துறை : ரூ.17,000 கோடி
சென்னை மாநகராட்சி : ரூ.10,000 கோடி
தொழில்துறை : ரூ.8000 கோடி
பள்ளிக்கல்வித்துறை : ரூ.5000 கோடி
மக்கள் நல்வாழ்வுத்துறை : ரூ.5000 கோடி
வேளாண்மை துறை : ரூ.5000 கோடி
சமூக நலத்துறை : ரூ.4,000 கோடி
உயர்கல்வித்துறை : ரூ.1,500 கோடி
இந்து சமய அறநிலையத்துறை : ரூ.1,000 கோடி
ஆதி திராவிடர் நலத்துறை : ரூ.1,000 கோடி
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை : ரூ.750 கோடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை : ரூ.500 கோடி
சிறைத்துறை : ரூ.500 கோடி
சுற்றுலாத் துறை : ரூ.250 கோடி
பால் வளத்துறை : ரூ. 250 கோடி
இப்படி பல்வேறு துறைகளில் திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.. தமிழகத்திற்கு தொழில் தொடங்க வந்த முதலீடு அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. எனவே இந்த ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்..” என்று தெரிவித்தார்.
Read More : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! பொங்கல் பரிசு ரூ.3,000; வெளியான புதிய அறிவிப்பு..!



