அதிகாலையில் அதிர்ச்சி..!! 32 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..!! படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம்..!!

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 5 விசைபிடிப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, இரண்டு விசைப்படகுகளுடன் 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், வெவ்வேறு கடற்பரப்பில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரு படகின் எஞ்சின் பழுதால், தமிழக மீனவர்களின் படகுகளை கரைக்கு கொண்டு செல்ல இயலாததால், எத்தனை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், எத்தனை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற குழப்பம் நீடிக்கிறது.

Read More : நடுரோட்டில் இறங்கி சண்டையிட்ட ’சுந்தரா டிராவல்ஸ்’ பட நடிகை ராதா..!! சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார்..!!

Chella

Next Post

Earthquake: ஒரே மாதத்தில் 3 முறை அடுத்தடுத்த நிலநடுக்கம்...! அச்சத்தில் மக்கள்...!

Thu Mar 21 , 2024
அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் தூங்கி கொண்டிருக்கும் போது ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.முதல் […]

You May Like