Raid: ஜாபர் சாதிக், அமீர் தொடர்புடைய 35 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…!

போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் தொடர்புடைய 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, அலுவலகம், குடோன் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார். சமிபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தியுள்ளார். இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள NCB அலுவலகத்தில் விசாரணைக்காக இயக்குனர் அமீர் கடந்த வாரம் ஆஜரானார். 11 மணி நேரம் அவரிடம் விசாரணையானது நடத்தப்பட்டது. இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர், கொடுங்கையூர், நீலாங்கரை, தியாகராய நகர் எனப் பல பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Vignesh

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்புகளுக்கான கட்டணம் உயருகிறது..?

Tue Apr 9 , 2024
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகள், துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்வி கட்டணம் உயர்வு குறித்த விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 வகையான […]

You May Like