அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிறைவு செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .
வழக்கில், சூரியமூர்த்தி தரப்பு, கட்சி விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என வாதிட்டது. அதே நேரத்தில், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்லாததால் அவரால் இத்தகைய கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், சூரியமூர்த்தியின் வாதங்களை முழுமையாக ஏற்காமல் இருந்தாலும், வழக்கின் விசாரணையைத் தொடர வழி உள்ளது எனத் தீர்மானித்து, எடப்பாடி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து விட்டார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி, உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ததை எதிர்த்து எடப்பாடி பனைசாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கூறிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவுக்கு தற்போது தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சூரியமூர்த்தி பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி பாலாஜி.
Read More: “நோயாளி உடன் தான் ஆம்புலன்ஸில் சென்றோம்..” இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுப்பு..