பகாசூரன் பட ஸ்டைலில் பொறியியல் கல்லூரியில் நடந்த ஹைடெக் விபச்சாரம்! சென்னையில் பதற வைக்கும் சம்பவம்!

சென்னையில் திரைப்பட பாணியில் கல்லூரியில் தங்கி படிக்கும் இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய 20 வயது கல்லூரி மாணவியை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் காதலரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த ஹை டெக் விபச்சார சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் சொகுசு விடுதியில் மூன்று இளம் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்கும் விபச்சார தடுப்பு பிரிவிற்கும் வந்த ரகசிய தகவலை தொடர்ந்து அந்த விடுதியை முற்றுகையிட்ட போலீசார் அங்கு தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஜெயப்பிரதா என்ற 20 வயது பெண்ணையும் இதற்கு புரோக்கராக இருந்த பிரேம் தாஸ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


இதில் இளம் வயதிலேயே விபச்சார தொழில் நடத்தி வந்த ஜெயப்பிரதாவிடம் காவல்துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஜெயப்பிரதா கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவிகளை அவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பண தேவைகளை புரிந்து கொண்டு மூளைச்சலவை செய்தும் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கியும் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் இதற்கு அவரது காதலரும் உடந்தையாக இருந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரது காதலரும் விபச்சார புரோக்கருமான அந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

”குடும்பத்தினரே விஷம் வைத்து கொல்ல முயற்சி”..!! நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு பேட்டி..!!

Fri Mar 17 , 2023
சண்டை பயிற்சியாளரக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பொன்னம்பலம், முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவராக அறிமுகமானார். நாட்டாமை, முத்து, அமர்க்களம், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் போட்டியாளராக பங்கு பெற்றார். அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பொன்னம்பலம் தனக்கு உடல் நிலை சரியில்லை எனவும் சிறுநீரக மாற்று அறுவை […]
ponnambalam actor 98685750 e1679051192966

You May Like