தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை எளிமைப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்….!

Untitled design 5 6 jpg 1

தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் தேர்தல் ஆணையம் கடந்த ஆறு மாதங்களில் 29 முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தாமதங்களை குறைக்கும் வகையில் 30-வது முன் முயற்சியாக தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது.


இதன்படி வாக்குகளை எண்ணும் பணி 2 பிரிவுகளைக் கொண்டதாகும். தபால் வாக்குகளை எண்ணுதல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுதல் ஆகியவை ஆகும். வாக்கு எண்ணப்படும் போது வழக்கமாக காலை 8.00 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையும், காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திர வாக்குகள் எண்ணிக்கையும் தொடங்கும்.

தற்போது தபால் வாக்குகள் அதிகளவில் பதிவாகி வருவதால் தபால் வாக்குகள் எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படாமல் தடுக்க போதுமான ஊழியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Vignesh

Next Post

ஓய்வூதிய திட்டத்தில் சேர ஏ-2 படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம்...! மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு...!

Fri Sep 26 , 2025
மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான ஏ-2 படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சாராத நிறுவனங்களில் தற்காலிக பணி நிமித்தமாகவோ அல்லது வெளிநாட்டு சேவைக்காகவோ பணி புரிந்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத பட்சத்தில், படிவம் ஏ-2-வை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனத்தின் துறை சார்ந்த அதிகாரிகளிடம் […]
Pension 2025

You May Like