அதிர்ச்சி! அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் பறவைக்காய்ச்சல் ; எச்சரிக்கை விடுக்கும் WHO

H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் H5N1 வைரஸ் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றா ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய காய்ச்சல் திட்டத்தின் தலைவர் வென்கிங் ஜாங் பேசுகையில், “H5N1 என்ற பறவைக்காய்ச்சலானது பறவைகளிடமிருந்து, தற்பொழுது ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு பரவியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெற்கு அட்லாண்டிக் கடற்கரையின் ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் உயிரிழந்தது. அதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் H5N1 என்ற பறவைக்காய்ச்சலால் அவை இறந்ததாக உறுதிசெய்தனர். அமெரிக்காவில் பறவைகாய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், பறவைக்காய்ச்சல் என்று சொல்லப்படும் H5N1 என்ற வைரஸ் அமெரிக்காவில் இரு மனிதர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து பெறப்படும் பச்சைப்பாலில் அதக அளவு H5N1 வைரஸ் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் WHO கவலைத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தவகை வைரஸ் பாலில் எத்தனை காலம் உயிருடன் இருக்கும் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

பாஸ்டுரைஸ் செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமே உட்கொள்வது உட்பட பாதுகாப்பான உணவு நடைமுறைகளை மக்கள் உறுதிப்படுத்துவது முக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளது. கொவிட் தொற்றை விட 100 மடங்கு மோசமானது H5N1 வைரஸ் என கூறிய விஞ்ஞானிகள், பாதிப்புக்கு உள்ளானோர் பலியாகும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Post

ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம்: வெளியான செயற்கைக்கோள் படங்கள்!

Sun Apr 21 , 2024
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான புதிய செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது.  இதில் தெற்கு இஸ்ரேலின் Nevatim விமானத் தளம் பாதிப்பை எதிர்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில்,  இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம் தொடர்பான புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. தொடர்புடைய படங்களை ஆய்வு செய்ததில், பெரிதாக பாதிப்பில்லை என்றே […]

You May Like