ஷாக்…! புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவை கட்டணம் உயர்வு…!

Govt Eb bill 2025

புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மீட்டர் வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய மின் இணைப்பு, மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் புதிய மின் இணைப்பு வழங்க, மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணத்தை, மின் வாரியம் வசூலிக்கிறது.


மின் பயன்பாட்டுக் கட்டணம் மட்டுமின்றி, பல்வகை சேவை கட்டணங்களையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 3.16 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டது. இந்நிலையில், ஜூலை 1-ம் தேதிக்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பழைய சேவைக் கட்டணமும், 1-ம் தேதிக்கு பின் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் வாரிய சேவைக் கட்டணங்களும் வசூலிக்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

ஆடி மாதத்தில் மறந்து கூட இதெல்லாம் செய்யாதீங்க!. ஏன் தெரியுமா?. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!.

Mon Jul 21 , 2025
ஆடி மாதம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் ஆகும். ஆகையால் இந்த மாதத்தில் என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன செய்ய கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். தாய் சந்திரன் தகப்பன் சூரியன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் கோயில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம் நடைபெறும். இந்நிலையில், ஆடியில் என்னென்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதை […]
aadi month specials 11zon

You May Like