வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி..!!

Job 2025 3

தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் செப்.4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாகவுள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூா்த்தி செய்யப்படவுள்ளது.

எனவே அக்காலிப்பணியிடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப் பணியிடங்கள் குறித்த விபரம் மற்றும் விண்ணப்படிவத்தினை https://kancheepuram.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக பழைய கட்டடம், முதல் தளம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு வரும் செப்.4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: உலகில் அதிக நேரம் தூங்கும் மக்களை கொண்ட டாப் 10 நாடுகள்! இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

English Summary

Employment at the Violence Guidance Center.. Tomorrow is the last date to apply..!!

Next Post

யாருடனும் கூட்டணி இல்லை.. அது எல்லாமே பொய்.. தவெகவின் என்.ஆனந்த் பரபரப்பு அறிக்கை..!

Wed Sep 3 , 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக […]
tvk vijay anand

You May Like