தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
இரண்டாம் நிலைக் காவலர் (Police Constables) – 2,833
இரண்டாம் நிலை சிறைக் காவலர் (Jail Warders) – 180
தீயணைப்பாளர் (Firemen) – 631
மொத்தம் – 3,644
வயது வரம்பு:
* இப்பணியிடங்களுக்கு பொதுப் பிரிவினர் 01.07.2025 தேதியின்படி 18 வயது நிறைவுற்றவராகவும், 26 வயது நிறைவு பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
* பிசி, பிசிஎம், எம்பிசி/டிஎன்சி பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் அதிகபடியாக 28 வயது நிறைவு பெறாதவராக இருக்க வேண்டும்.
* எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் 18 முதல் 31 வயது நிறைவு பெறாதவராக இருக்க வேண்டும்.
* மூன்றாம் பாலினத்தவர் பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் 31 வயது நிறைவு பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
* ஆதரவற்ற, கணவரை இழந்தவர்கள் 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* முன்னாள் ராணுவத்தினர் 47 வயது நிறைவு பெறாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் பொது ஆட்சேர்ப்பு தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில்:
1. தமிழ்மொழி தகுதித் தேர்வு
2. முதன்மை எழுத்துத் தேர்வு
3. சான்றிதழ் சரிபார்ப்பு
4. உடற்தகுதித் தேர்வு ( உடற்கூறு அளத்தல், உடல் உறுதி தேர்வு, உடற்திறன் போட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்)
மேலும், NCC, NSS மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்காலிக தேர்வு பட்டியல் முதலில் வெளியிடப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பின்பு இறுதி தேர்வு பட்டியல் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025.