சூப்பர்…! 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு… ரூ.800 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கு அனுமதி…!

money college 2025

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் இணை மேம்பாட்டு ஆணையர் தலைமையிலான ஒப்புதல் குழு பிரிவு, எட்டு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்திசார் முதலீடுகள் தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT/ITES), உற்பத்தி, பொறியியல் மற்றும் தளவாடத் துறைகளில், சுமார் 800 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 3,500க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.


தமிழ்நாட்டின் பொருளாதார சூழலை வலுப்படுத்துவதில் இந்த ஒப்புதல்கள் குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்துள்ளன. அனுமதிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

ஶ்ரீபெரும்புதூரின் சிப்காட்டில் பிஎம்ஐ குளோபல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் 644 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, 460 கூடுதல் வேலைகளை உருவாக்குகிறது. புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதி சார்ந்த நிறுவனமான விவிடிஎன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், பொள்ளாச்சியில் 2,300 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க 101.6 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. சுபெனோ இந்தியா பிரைவெட் லிமிடெட், கோவையில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள டைடல் பூங்காவில் 4.77 கோடி ரூபாயை முதலீட்டுடன் 180 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

25க்கும் மேற்பட்ட திருநங்கைகளை பணியமர்த்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பிரிவுகள் கூட்டாக உறுதியளித்ததன் மூலம், உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒப்புதல் குழு பிரிவின் கூட்டம் ஒரு மைல்கல் சாதியாக அமைந்தது. இந்த முயற்சி பொருளாதார செழிப்பை மட்டுமல்ல, பணியாளர்களிடையே சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மையையும் வளர்ப்பதற்கான மெப்ஸ்-ன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் அதன் முக்கிய பங்கை வலுப்படுத்தும் வகையில், இந்த ஒப்புதல்களுடன், மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் நிதியாண்டு 2025-26 இல் இதுவரை 1,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருப்பதுடன், 10,000 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

Vignesh

Next Post

இந்த ஒரு பொருளை காபி தூளில் கலந்து முகத்தில் தடவுங்கள்!. ஒரே வாரத்தில் சருமம் பளபளக்கும்!.

Tue Sep 9 , 2025
நம் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம் , ஆனால் சிலருக்கு இது நடக்காது, சில நேரங்களில் தோல் பிரச்சினைகள் இளம் வயதிலேயே தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சருமம் 1 வாரத்தில் அழகாக இருக்க விரும்பினால் , இந்த ஒரு பொருளை காபியுடன் கலந்து முகத்தில் தடவவும். காபி மற்றும் பாலைக் […]
Face 2025

You May Like