’நாடக காதல்களுக்கு முற்றுப்புள்ளி’..!! ’பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம்’..!! பாமக தேர்தல் அறிக்கை..!!

நாடகக் காதல்களால் இளம்பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, குடும்ப அமைப்பைப் பாதுகாக்க 21 வயதுக்கு கீழானவர்கள் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டயமாக்குவோம் என பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுகவைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் இன்று தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

* இந்த தேர்தல் அறிக்கையில், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாமக வலியுறுத்தும்.

* உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.

* தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாமக பாடுபடும்.

* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும்.

* கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசுத் துறை, பொதுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

* தனியார் துறை, நீதித் துறை ஆகியவற்றிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும்.

* மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.

* தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

* நெருக்கடி நிலைக் காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்கு பாமக பாடுபடும்.

* மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.

* ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50% அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை.

* தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்த மத்திய அரசை பாமக வலியுறுத்தும்.

* சென்னையில் இருந்து திருச்சி வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை இப்போது செங்கல்பட்டு வரை 8 வழிச் சாலையாகவும், திண்டிவனம் வரை 6 வழிச் சாலையாகவும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இச்சாலை முழுவதும் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுவதுடன், அதன்மீது திண்டிவனம் வரை 6 வழி உயர்மட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட வழக்கமான வாக்குறுதிகள் பாமக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற ஒரு வாக்குறுதியையும் பாமக தமது தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்துள்ளது. அதாவது, “சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்துக்குப் பெற்றோர் ஒப்புதல் அவசியம். இந்தியாவில் கர்நாடகா உயர்நீதிமன்றமும் இதனை வலியுறுத்தியுள்ளது.

மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் குடும்ப அமைப்பைக் காக்கவும், வளரும் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்கிற வாக்குறுதியையும் பாமக தமது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

Read More : ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம்..!! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவிப்பு..!!

Chella

Next Post

50MP கேமரா, 128GB மெமரி, 5G மொபைல் விலை ரூ.12,000 மட்டுமே!

Wed Mar 27 , 2024
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வசதி, 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் இந்தியாவில் ரூ.12,000 விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ரியல்மி 12எக்ஸ் […]

You May Like