என்னா அடி!… தோனியின் வானவேடிக்கை!… அதிர்ந்த வான்கடே!… பத்திரனாவின் பந்துவீச்சில் சுருண்ட மும்பை!

CSK VS MI: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான தல தோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இதையடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான 29-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக ரஹானே, ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரஹானே 5 ரன்னிலும், ரவீந்திரா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்குவாட், சிவம் துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புட ஆடிய கேப்டன் கெய்குவாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்சர்கள் உள்பட 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.பின்னர், மிச்சேல் உடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் கடந்தார். மிச்சேல் 17 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தோனி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில், கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி தான் எதிர் கொண்ட நான்கு பந்துகளில், முதல் மூன்று பந்துகளை சிக்ஸருக்கு விளாசி மைதானத்தினை அலறவிட்டார்.

மொத்தம் 4 பந்துகளில் மூன்று சிக்ஸர் மற்றும் இரண்டு ரன்கள் உட்பட மொத்தம் 20 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 500 ஆகும். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களுடனும், தோனி 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷான் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா சதமடித்தார். மறுபுறம் திலக் வர்மா 31 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டும் எடுத்து. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசிய பதிரனா, 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். சென்னை அணிக்கு சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி கொடுத்திருந்தார் அவர். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது சிஎஸ்கே.

Readmore: ஈரானின் எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா!… இஸ்ரேலுக்கு ஆதரவு தரமாட்டோம்!… வெள்ளை மாளிகை!

Kokila

Next Post

சரக்கு கப்பலை கைப்பற்றிய ஈரான்...! சிக்கிய 17 இந்தியர்கள்... ஜெயசங்கர் அதிரடி நடவடிக்கை...!

Mon Apr 15 , 2024
ஈரானிய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலின் 25 பேர் கொண்ட பணியாளர்களில் 17 இந்திய பணியாளர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரானிய பிரதமரிடம் பேசிய மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெயசங்கர். இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது 300 க்கும் மேற்பட்ட ஆளில்லா […]

You May Like