ஈரானின் எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா!… இஸ்ரேலுக்கு ஆதரவு தரமாட்டோம்!… வெள்ளை மாளிகை!

America: இஸ்ரேல் செய்யும் எந்தவொரு பதிலடியிலும் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம் வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்ரேலின் மக்களையும், அங்குள்ள அமெரிக்க வீரர்களையும் அமெரிக்க இரும்பு கவசம் கொண்டு பாதுகாக்கும் என உறுதியளித்தார். இதனிடையே இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிரான எந்தவொரு இஸ்ரேலிய எதிர் தாக்குதலிலும் அமெரிக்கா இணையாது என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும். ஆனால் போரை விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து ஜோ பைடன் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இஸ்ரேல் செய்யும் எந்தவொரு பதிலடியிலும் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம். நாங்கள் அத்தகைய செயலில் பங்கேற்பதை கற்பனை செய்து பார்க்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Readmore: ADMK | புதுச்சேரி அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க சதி.! மாநிலத் தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.!

Kokila

Next Post

மீண்டும் ஒரு வாய்ப்பு...! காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம்...!

Mon Apr 15 , 2024
தபால் வாக்கு செலுத்திய தவறியவர்கள் இன்று வாக்களிக்கலாம் என சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய நியமிக்கப்பட்ட அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்த தவறி இருந்தால் அவர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி மையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்தாத அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் […]

You May Like