EPFO: 2017 – 2025 வரை பதிவு செய்யாத நபர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…! உடனே இதை செய்ய வேண்டும்

EPFO PF 2025

தொழிலாளர் பதிவுத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்களை பதிவு செய்துகொள்ள தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் வைப்பு நிதித் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம், சந்தாதாரர்கள் பதிவு செய்து கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், எவ்வித சிரமுமின்றி எளிதாக தங்களது தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், இது குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் அறிந்து கொண்டு பயனடைவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சமயம் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதித்திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாநில அரசு நிர்வாகத்தையும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன்படி, சந்தாதாரர்கள் பதிவு செய்து கொள்ள ஏதுவாக நவம்பர் 2025 முதல் 6 மாத காலத்திற்கு சிறப்பு நடைமுறைகளுக்கான சாளரம் செயல்படும் என்றும் தகுதியுள்ள தொழிலாளர்கள் அதாவது, 2017 ஜூலை 1-ம் தேதி முதல் 2025 அக்டோபர் 31-ம் தேதி வரை இத்திட்டத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு வகைகளை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே...!

Fri Dec 19 , 2025
வந்தே பாரத் ரயில்களில் பிராந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே. பயணிகளின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், கலாச்சார ரீதியாகப் பொருத்தமான சுவைமிக்க உள்ளூர் உணவுகளை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களில் பிராந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்தின் சுவையை நேரடியாகப் பயணிகளிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம் பயணிகள் தங்கள் ரயில் இருக்கைகளில் அந்தந்த […]
food train 2025

You May Like