UAN எண் இல்லாமல் பிஎஃப் பணத்தை எப்படி எடுப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
தனியாரோ அல்லது அரசு வேலையோ, மாதச் சம்பளம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் ஊழியர் சார்பில் குறிப்பிட்ட தொகையும், அவர் புணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் குறிப்பிட்ட தொகையும் சேர்த்து பிஎஃப் பிடித்தம் செய்யப்படும்.. இந்த தொகையே பிஎஃப் பங்களிப்பு என்று அழைக்கப்படுகிறது.. அந்த வகையில் பிஎஃப் சந்தாதாரர்களின் மாத சம்பளத்தில் இருந்து பிஎஃப் தொகை கழிக்கப்படும் போது, உங்கள் பிஎஃப் கணக்கில் அந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அமைப்பு இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்து (EPFO) பிஎஃப் (PF) பணத்தைப் பெற விரும்பினால், உங்களிடம் கட்டாயம் UAN (United Authentication Number) எண் இருக்க வேண்டும். அந்த எண் இல்லையென்றால், ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. உங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது. எனினும் அதற்கு ஒரு வழி இருக்கிறது.
ஆம்.. உங்களிடம் UAN எண் இல்லாவிட்டாலும் உங்கள் பிஎஃப் பணத்தை எடுக்கலாம். நீங்கள் ஈபிஎஃப்ஓ வலைத்தளம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பினால், UAN எண் கட்டாயமாகும். இருப்பினும், EPFO அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பதன் மூலம் UAN எண் இல்லாமல் பிஎஃப் பணத்தை எடுக்கலாம். எனவே, UAN எண் இல்லாமல் பணத்தை எடுக்க, படிவம் 19, படிவம் 10C, ரத்து செய்யப்பட்ட காசோலை, பாஸ்புக் நகல் போன்ற பல ஆவணங்களின் நகல்களை நீங்கள் பெற வேண்டும். மேலும், உங்கள் அடையாளம் மற்றும் சேவை காலத்தை உறுதிப்படுத்த நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், EPFO அலுவலகத்தில் விண்ணப்பித்து PF பணத்தை எடுப்பது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து PF பணத்தை எடுப்பதை விட அதிக காலம் எடுக்கும். EPFO அலுவலகத்திலிருந்து PF பணத்தை எடுக்க குறைந்தது 2 வாரங்கள் ஆகும். இந்த சூழ்நிலையில், பணியில் சேர்ந்த தேதி, வங்கி கணக்கு விவரங்கள், பெயர் போன்றவற்றில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், கூடுதல் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்கவும்.
UAN இல்லாமல் PF பணத்தை ஆஃப்லைனில் எடுக்க அனுமதிக்கப்பட்டாலும், உங்கள் PAN அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி EPFO வலைத்தளத்தில் அதை செயல்படுத்துவது அவசியம்.
Read More : சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம்.. ஆனால் அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு..!! பொதுமக்கள் ஷாக்..