எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உள் வாடகைக்கு விட்டுள்ளார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராடும் அனைவரும் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் படத்தை வைத்து முழக்கமிடுவதை பார்க்க முடிகிறது.. தந்தை பெரியார் அரசியல் ரீதியாக தமிழ்நாட்டை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்.. அதனால் தான் பாஜகவின் எந்த தில்லுமுல்லு வேலையும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை..
பாஜகவால் நேரடியாக மக்கள் ஆதரவை பெற முடியாது.. அதனால் தான் அவர்கள் அதிமுகவை மிரட்டி அவர்களுடன் சவாரி செய்து இன்று தமிழ்நாட்டிற்குள் நுழைய பார்க்கிறார்கள்.. பாஜகவிற்கு பழைய அடிமைகள் போதாது இன்று புதுப்புது அடிமைகளையும் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. எத்தனை அடிமைகளின் துணை உடன் பாஜக வந்தாலும், தமிழ்நாடு சுயமரியாதை மண் என்பதை 2026 தேர்தலில் மீண்டும் நிரூபித்து காட்டும்..
எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக கட்சியை வாடகைக்கு எடுத்து, அதை உள் வாடகைக்கு கொடுத்துள்ளார்.. இன்று சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை கொண்டாடி வருகிறோம்.. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.. கார் மாறி போனால் பரவாயில்லை, கால் மாறி விழுபவர் தான் எடப்பாடி பழனிசாமி.. தந்தை பெரியாதை ஊட்டிய சுய மரியாதை உணர்வு மக்களுக்கும் இருக்கும் வரை அவர்களால் தொட்டு கூட பார்க்க முடியது.
தமிழ்நாட்டின் ஆளுநர் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.. பாஜகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு நமக்கு செய்துக் கொண்டிருக்கிறார்..” என்று தெரிவித்தார்..
Read More : Breaking : கிட்னி முறைகேடு வழக்கு.. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கமாட்டோம்.. உச்சநீதிமன்றம் அதிரடி..



