நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவை ஆதரித்தவர்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.. எம்.சி. சம்பத், கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, பாலகிருஷ்ணா ரெட்டி பதவி பறிக்கப்பட்டுள்ளது.. அருண்மொழித் தேவன், சு.ரவி, கப்பச்சி வினோத், பரஞ்சோதி ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.. அதே போல் ப.குமார், எம்.ரெத்தினசாமி, எம்.சேகர், சி.மகேந்திரன் உள்ளிட்டோரின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து தங்கள் பதவி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது ” அதிமுக உடன் கூட்டணி அமைக்க வீடு தேடி வந்த தலைவர்களை நீங்கள் தேவையில்லை, நான் வெற்றி பெறுவேன்.. 210 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என்று சொல்லி, கூட்டணிக்கு வந்த தலைவர்களை விரட்டியடித்த தலைமையை இன்று நாம் பெற்றுள்ளோம்..
அவர்களை எல்லாம் நாம் அரவணைத்து இருந்தால், நாம் வெற்றி பெற்று இருக்கலாம்.. அதிமுகவுடன் தவெக கூட்டணியமைக்க தயாராக இருந்த போதும், நாங்களும் கூட்டணி அமைக்கலாம், மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று கூறிய போது, எல்லாம் எனக்கு தெரியும் நான் பார்த்துக் கொள்கிறேன்.. அவர்கள் வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்..
அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவு.. மக்களவை தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு எடுத்தார்.. பாஜக உடன் கூட்டணி வைத்த காரணத்தை இன்று வரை சொல்லவில்லை..
யாரை எல்லாம் கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கினாரோ அவர்கள், அனைவரும் எம்.எல்.ஏ ஆகிவிட்டனர்.. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுக்காததால், அவர்கள் கூட்டணியில் இருந்து விலகினார்கள்..
எங்களை நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை.. ஒற்றைத் தலைமையை நாங்கள் தான் கோரினோம்.. அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறோம்.. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி செய்யும் ஒரே வேலை கட்சியில் இருந்து நீக்குவது தான்.. எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்ததில் இருந்து தொடர் தோல்வி தான்..
அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடியே காரணம், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்.. என்றைக்கு பொதுச்செயலளாராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தோமோ அன்றைக்கே அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்றுவிட்டது.. தோல்விக்கு பொறுப்பேற்பவரே உண்மையான தலைவர்..
அதிமுக பல தேர்தல்களில் தோற்றாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.. வெற்றி பெற்றால் தன்னால் தான் என்பதும் தோற்றால் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கைகாட்டுவரும் நல்ல தலைவர் அல்ல.. எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது..” என்று தெரிவித்தார்..



