ஆந்திர மாநிலத் தேர்தலில் பவன் கல்யாணுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்த பிரமாண்யா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரும் காலங்களில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர்களை தீவிரமாக தேடி வந்த அதிமுக, 2024 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத் தேர்தலில் பவன் கல்யாணுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்த பிரமாண்யா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘Hello AP BYE BYE YCP’. ‘BYE BYE Jegan’ என்ற வாக்கியத்தை வைத்து பவன் கல்யாண் தீவிர பிரச்சாரம் செய்தார். அதே பாணியில் தான் ‘BYE BYE STALIN’ என்ற வியூகத்தை தற்போது இபிஎஸ் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுறது.
Read more: நகைப்பிரியர்களே.. தங்கம் விலை இன்று சற்று உயர்வு.. எவ்வளவு தெரியுமா?