தேமுதிக முக்கிய தலைவர்களை கொத்தாக தூக்கிய EPS.. பிரேமலதா தலையில் இறங்கிய இடி..!! அப்போ கூட்டணி..?

Premalatha Eps 2025

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.


அதே போல் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட தேமுதிக இந்த தேர்தலில் தங்களின் கூட்டணி நிலைபாடு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை..

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தின் மூலமாக கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

இதே போல அதிமுகவும் தங்களது கட்சியை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நடந்த இணைப்பு விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

பொதுவாக கூட்டணிக்கு வாய்புள்ள கட்சிகளில் இருந்து ஆள் தூக்கும் வேலையை எந்த கட்சியும் செய்யாது. ஆனால் நேற்று இரவு தேமுதிகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால் கூட்டணி அமைப்பதில் பிணக்கு வருமா என கேள்வி எழுந்துள்ளது.

Read more: சாமி கும்பிடும்போது கண்களை மூடலாமா..? விளக்கேற்றும்போது இது அவசியமா..? பலர் மனதிலும் எழும் கேள்விக்கு பதில்..!!

English Summary

EPS, which has swept away key DMDK leaders, is a blow to Premalatha..!!

Next Post

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா?. வேம்பு ஃபேஸ் பேக்!. எளிய வீட்டு வைத்தியம் இதோ!.

Tue Aug 26 , 2025
வேப்ப இலைகளால் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுங்கள். பருக்கள், தழும்புகளை நீக்கி, முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும் வேம்பின் எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளுங்கள். அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் மாசுபாடு, தூசி, ரசாயன பொருட்கள் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், முகத்தின் பளபளப்பு மங்கிவிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இயற்கையான வழியைப் பின்பற்ற விரும்பினால், வேப்ப இலைகள் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக […]
neem leaves skin care 11zon

You May Like